நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கேரளாவும் என்னோட கோட்டைதான்: கெத்து காட்டும் தளபதி விஜய்

திருவனந்தபுரம்:

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் தமிழகத்திற்கு அடுத்த படியாக சொல்லவேண்டும் என்றால் கேரளாவைக் கூறலாம். 

ஏனென்றால், கேரளாவில் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனை பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்று கூட இல்லை.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து 14-ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய் மீண்டும் தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவிற்கு சென்றுள்ளார்.

அவரை பார்க்கவேண்டும் என்று அங்கு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் விரைவாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடியுள்ளனர்.

இந்த செய்தியும் வீடியோவும் தான் தற்போது ட்ரென்டிலும் இருக்கிறது.

அந்த அளவிற்கு கேரளாவையே அதிர வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் விஜய்யை பார்க்க ஆவலுடன் விமான நிலையத்தில் கூடியுள்ளது. 

அதைப்போல, கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்திலும் பல ரசிகர்கள் கூடியுள்ளனர். 

மேலும் சிலர் பைக்கில் விஜயின் புகைப்படத்தை வைத்து கொண்டு பைக் பேரணியிலும் ஈடுபட்டுள்ளனர். 

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset