நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர் பேரவை நிதியுதவிகளை ஏற்க அனுமதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

கோலாலம்பூர்: 

பல்கலைக்கழகம், கல்லூரி சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

சட்டத்தின் 15ஏ பிரிவு திருத்தம், விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, மாணவர் பேரவை, மாணவர் அமைப்புகள் பணம் திரட்டவும் நன்கொடை பெறவும் அனுமதிக்கிறது என்றூ மசோதாவைத் தாக்கல் செய்த உயர்கல்வி அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காடிர் தெரிவித்தார். 

மேலும், இந்த மசோதா மாணவர் பேரவை அல்லது மாணவர் அமைப்பின் கீழ் மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட நோக்கத்திற்கு பணம் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது

 இன்று இரண்டாவது மற்றும் மூன்றாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்ட மசோத குறித்து 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.

முன்னதாக விவாதத்தின் போது, சில எதிர்க்கட்சி பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

10 டிசம்பர் 2018-ஆம் ஆண்டு அன்று நாடாளுமன்றம் பிரிவு 15(2)(c) ஐ ரத்து செய்யும் அக்குவின் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இது மாணவர்கள் வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடுக்கிறது.

இதனால் பேச்சு மற்றும் அரசியலில் அதிக இடமும் சுதந்திரமும் கிடைக்கிறது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுப் பல்கலைக்கழகக் கல்லூரிகளை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான விதிகளை இச்சட்டம் கொண்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset