நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனங்களுக்கிடையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்த  அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன?: டத்தோ நெல்சன் கேள்வி

கோலாலம்பூர்:

தீபகற்ப மலேசியாவில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்த அரசாங்கத்தின் திட்டங்கள் கொண்டிருக்கிறது.

குறிப்பாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு இதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னவென்று மேலவையில் செனட்டர் டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பினார்.

இக் கேள்விக்கு தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் மடானி மலேசிய ஒற்றுமை பிரச்சாரம் ஒரு முன்னணி முதன்மையான திட்டமாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கொண்டுள்ளது.

இனங்களுக்கிடையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துதல், சிந்தனைகள், புரிதல் ஆகியவற்றை வழங்கிவது தான் இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் மே இறுதி வாரம் ஒற்றுமை வாரமாக அனுசரிக்கப்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அமைச்சின் இந்த முன்மொழிவை கடந்த மார்ச் 3ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த ஒற்றுமை வாரத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருப்பொருளுடன் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று துணையமைச்சர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset