நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாஹித்தின் வழக்கு குறித்து முடிவு செய்ய சட்டத்துறை தலைவருக்கு செப்டம்பர் வரை அவகாசம்

கோலாலம்பூர்:

வெளிநாட்டு விசா தொடர்பான ஊழல் வழக்கு தொடர்பாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமத் ஜாஹித் ஹமிடி விடுவிக்கப்பட்ட வழக்கில், மேல்முறையீட்டு மனுவைத் தொடர வேண்டுமா அல்லது திரும்பப் பெறுவதா என்பதை சட்டத்துறைத் தலைவர்  தீர்மானிக்க வேண்டும்.

இதற்காக அவருக்கு செப்டம்பர் 9ஆம் தேதி வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

ஹட்ஹரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு இந்த கால அவகாசம் வழங்கியது.

ஏனெனில், துணைப் பிரதமரிடமிருந்து இரண்டு பிரதிநிதித்துவங்களை ஏற்கலாமா அல்லது அதற்கு நேர்மாறாக அரசு தரப்பு இன்னும் பரிசீலித்து வருகிறது.

அஹ்மத் ஜாஹித்தின் முதல் பிரதிநிதித்துவம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

அதற்கு முன்பு இரண்டாவது மனு கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜாஹித்தின் விடுதலையை ரத்து செய்வதற்கான அரசுத் தரப்பு மேல்முறையீட்டின் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில், 

அனுப்பப்படும் எந்தவொரு பிரதிநிதிக்கும் பதில் இருக்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் முஹம்மத் டுசுகி மொக்தாரிடம் ஹட்ஹரியா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset