நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ணம்: லிவர்பூலை வீழ்த்தி வஞ்சம் தீர்த்தது மென்செஸ்டர் யுனைடெட்

லண்டன்:

எப்ஏ கிண்ணக் கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வஞ்சம் தீர்த்தது மென்செஸ்டர் யுனைடெட் அணி.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை ஸ்கோட் மெக்தோமனேய், அந்தோனி, மார்கஸ் ராஸ்போர்ட், அமாட் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

லிவர்பூல் அணியின்ர் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset