நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரா ஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்

டோக்கியோ: 

பாரா ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் 3ஆவது இடம் பிடித்தார். 

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நேற்று  உயரம் தாண்டுதல் (டி42) பிரிவில், இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார், வருண் சிங் ஆகியோர் பங்கேற்றனர். 

பதக்கச் சுற்றில் இருந்த  9 வீரர்களில் மாரியப்பன், சரத்குமார் ஆகியோர் முதல் 2 இடங்களில் இருந்தனர். அமெரிக்க வீரர் சாம் கிரெவி 3 இடத்திலும், வருண் சிங் 4ஆவது இடத்திலும் இருந்தனர். 

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப் போட்டியில் மாரியப்பன், அமெரிக்க வீரர் சாம் கிரெவி இருவரும் 1.86 மீட்டர் தாண்டி சமநிலை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து, 1.88 மீட்டர் உயரம் தாண்டும் முயற்சியில் இறங்கினர். இதில் மாரியப்பன் 3 வாய்ப்புகளையும் தவறவிட்ட நிலையில், சாம் கடைசி வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 

2வது இடம் பிடித்த மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம்  கிடைத்தது. இது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மாரியப்பன் பெறும் 2ஆவது பதக்கமாகும். ஏற்கனவே ரியோ பாரா ஒலிம்பிக்கில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்றிருந்தார். 

சரத்குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset