நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான ஒத்துழைப்பு ஓர் அற்புதமான புதிய அத்தியாயத்தை குறிக்கிறது: நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் 

சென்னை: 

நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான ஒத்துழைப்பு விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்துடன் தொடங்கி தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்வதில் தங்களது அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது என்று 
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் தெரிவித்தார். 
 
இயக்குநர் மாரி செல்வராஜின் திறமையும் திறன் மிகு தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவும் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பிரிவாக இயங்குகிறது. மேலும், ஊடகத்துறை நிபுணரான சமீர் நாயரின் வழிகாட்டலில் செயல்படுகிறது.

தொலைக்காட்சி தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சி, இணைய தொடர், திரைப்படம், ஆவண படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளுக்கு உள்ளடக்கம் மற்றும் கதை கருவினை வழங்கும் முன்னணி ஸ்டூடியோவாக அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் திகழ்கிறது. 

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் ஏராளமான தொடர்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. 

அத்துடன் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், நந்திதா தாஸ் இயக்கத்தில் நடிகர் கபில் சர்மா நடிப்பில் 'ஸ்விகாடோ' எனும் திரைப்படத்தை தயாரித்து, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டு, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டையும் பெற்றது. 

இந்நிலையில், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நீலம் ஸ்டுடியோஸ், மாரி செல்வராஜுடனும் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருப்பதாக நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் தெரிவித்துள்ளனர். 

அர்த்தமுள்ள சினிமா மற்றும் உண்மையான கதைகளுக்கான தங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset