
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரை, திண்டுக்கல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய ஸ்டாலின்
சென்னை:
மதுரை, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று காலை ஆலோசனையில் நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் போட்டியிடுகிறது” எனத் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை, மதுரை ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 1:20 pm
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 8, 2025, 4:00 pm
2026இல் திமுகவை மாற்றுவோம்: மகளிர் மகளிர் தின வாழ்த்து செய்தியில் விஜய்
March 6, 2025, 9:04 pm