நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாஜகவிடம் 15 தொகுதிகளை கேட்கும் ஓ.பன்னீர்செல்வம்: பாஜக கொடுக்குமா, கைவிரிக்குமா? 

சென்னை:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட 15 தொகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், 15 தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நாகை, தஞ்சாவூர், ஆரணி, திருச்சி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், மதுரை, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜகவிடம் ஓபிஎஸ் அணியினர் கொடுத்துள்ளதாக தகவல்.

அத்தனை தொகுதிகளை ஓபிஎஸ்ஸுக்கு பாஜக வழங்குமா அல்லது கைவிரிக்குமா என்று இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset