செய்திகள் தமிழ் தொடர்புகள்
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால் விரைவு ரயில்கள் நிறுத்தம்
ராமேஸ்வரம்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால், அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதால் அயோத்தி - ராமேஸ்வரம் விரைவு ரயில் 3 மணிநேரமாக மண்டபத்தில் நிறுத்தப்பட்டது.
காற்றின் வேகம் குறைந்த பின் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்தததால் தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் வந்த ரயில் மண்டபத்திலும், ராமேஸ்வரம் மதுரை ரயில் பாம்பன் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் 60 கி.மீ., வேகத்தில் வீசி வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் பகுதி மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 10:37 pm
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்த விஜய்: காலையிலிருந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
April 8, 2026, 10:40 pm
புதுச்சேரியில் நாளை 9ஆம் தேதி காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
April 8, 2026, 12:50 pm
தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.53.57 லட்சம் பறிமுதல்
April 7, 2026, 8:03 pm
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்
April 7, 2026, 3:53 pm
