நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜிநாமா: ஆணையர்கள் இல்லாமல் தள்ளாடும் தேர்தல் ஆணையம்

புது டெல்லி:

2027 வரையில் பதவிக்காலம் உள்ள தேர்தல் ஆணையர் அருண் கோயல் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்க சில நாள்களே உள்ள நிலையில் திடீர் ராஜிநாமா செய்த்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டும் உள்ளார். 2 தேர்தல் ஆணையர்களும் இல்லாமல் தேர்தல் ஆணையம் தள்ளாடி வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய அரசின் செயலாளர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டார்.

இந்த அவசர நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

தற்போது அவர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடுகளே இந்த ராஜிநாமாவிற்கான காரணங்கள் என சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர் பதவிகள் உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார். அனுப் பாண்டே என்ற தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். அந்த இடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

தற்போது, அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளதால் ஆணையர்கள் இல்லாமல் தேர்தல் ஆணையம் தள்ளாடி வருகிறது.

தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் தளம், சிவசேனை கட்சிகள் பிளவுப்பட்டபோது பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் அணிக்கு அந்தக் கட்சியின் பெயரை வழங்கி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனம் எழுந்தது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி விட்டு ஒன்றிய அமைச்சரை நியமிக்க சட்டம் கொண்டு வரப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தற்போது தேர்தல் ஆணையர் ராஜிநாமா செய்துள்ள பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நரேந்திர மோடி கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அருண் கோயல் ராஜிநாமா செய்தாரா என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க பயணத்தை முடித்து கொண்டு வந்த அருண் கோயல் திடீரென ராஜிநாமா செய்தது ஏன் என்று திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், இரு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க மார்ச் 15-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset