நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

48 நிமிடத்தில் 1 மில்லியன் உறுப்பினர்: மாஸ் காட்டும்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்

சென்னை:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமூக ஊடகங்களில் மிகப்பெரும் பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்து வரும் விஜய் நேற்று முன்தினம் விலை இல்லா வீடுகள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் கட்சியின் முக்கிய அணிக்கு மகளிரை தலைமை ஏற்க செய்து மாஸ் காட்டினார் விஜய்.

இந்நிலையில் தன்னுடைய கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார். 

அதில் முதல் ஆளாக உறுப்பினர் அட்டையை பெற்ற விஜய் எப்படி இதில் இணைய வேண்டும் என்ற வழிமுறையையும் கூறியிருந்தார்.

அந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே மக்கள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். 

அதை அடுத்து 48 நிமிடங்களில் ஒரு மில்லியன் விண்ணப்பங்கள் வந்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset