நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

அதிவிரைவில் வாட்ஸ்-அப்பில் வரவுள்ள செய்தி எதிர்வினைகள் அம்சம்

கலிபோர்னியா:

உலக மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ்-அப் செயலி. அதனால் தனது பயனர்களுக்கு சிறப்பான பயனர் அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் புது புது அம்சங்களை வாட்ஸ்-அப் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புதிதாக வாட்ஸ்-அப்பில் செய்தி எதிர்வினைகள் (Message Reactions feature) அம்சம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனை WaBetaInfo தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய தளங்களில் இந்த அம்சம் உள்ள நிலையில் அதை தங்கள் தளத்திலும் சேர்க்க வாட்ஸ்-அப் முயற்சி செய்து வருகிறது.. 

இதன் மூலம் சேட் பாக்ஸில் ஒருவர் அனுப்பும் தகவலுக்கு எமோஜிகள் மூலம் பதில் கொடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த எமோஜிகளின் தீம் ஃமுகநூல், இன்ஸ்டாகிராம் தளம்போல இருக்குமா என்பது துல்லிதமாகத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

+ - reset