நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளீவ்லேண்ட் பொது ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதி சுற்று சிவசங்கரி முன்னேற்றம்

கோலாலம்பூர்: 

அமெரிக்கா ராக்கெட் கிளப்பில் நடைபெற்று வரும் கிளீவ்லேண்ட் பொது ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதிக்குச் சுற்றுக்குத் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி தகுதி பெற்றார். 

இன்று அதிகாலை நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் எஸ்.சிவசங்கரி உலகத் தரவரிசையில் 16-ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் அலிசியா மீட்டைச் சந்தித்து விளையாடினார்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய எஸ்.சிவசங்கரி 11-6, 11-8, 11-8 என்ற செட் கணக்கில்  அலிசியா மீட்டைத் தோற்கடித்தார்.

அரையிறுதி ஆட்டத்தில் எஸ்.சிவசங்கரி உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கோர்ஜினா கென்னடியை எதிர்கொள்கிறார்.

இதற்கு முன்னர் எஸ்.சிவசங்கரி கென்னடியுடன் நான்கு முறை மோதியுள்ளார். ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset