நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் அர்செனல் அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

பிராமல் லேண்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் சிப்பீல்டு யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 6-0 என்ற கணக்கில் சிப்பீல்டு யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை  மார்டின் ஓடாகர்ட், கேப்ரியல் மார்சினெலி, காய் ஹாவர்டஸ், டேசியன் ரைஸ், பென் ஒயிட் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 61 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மிலான் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜினோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset