நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்தியாவில் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்தது

சென்னை:

இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. 

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.23.50 உயா்ந்து, ரூ.1,960.50-க்கு விற்பனையாகிறது.  

இதனால் உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset