
செய்திகள் இந்தியா
ஒரே ஆண்டில் பாஜகவுக்கு மட்டும் ரூ.2,361 கோடி வருவாய்
புது டெல்லி:
கடந்த ஆண்டில் 6 தேசியக் கட்சிகள் மொத்த சுமார் ரூ.3,077 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இதில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் சேர்க்கப்படவில்லை. இதில் பாஜகவுக்கு மட்டும் ரூ.2,361 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
கட்சி நன்கொடை, வங்கி வட்டி, சந்தா உள்ளிட்ட வழிமுறைகளில் கிடைக்கப் பெற்ற வருவாய் குறித்து பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.
அதில், கடந்த 2021-22 ஆண்டைவிட பாஜகவின் வருவாய் சுமார் ரூ.443 கோடி அதிகரித்து அடுத்த ஆண்டு ரூ.2,361கோடியாக உயர்ந்துள்ளது. அதில், ரூ.1,361 கோடியை மட்டுமே பாஜக செலவிட்டுள்ளது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பகுஜன் வருவாய் குறைவு: அடுத்த இடத்தில் உள்ள காங்கிரஸின் வருவாய் சுமார் ரூ.452 கோடியாகும். முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், காங்கிரஸின் வருவாய் 16 சதவீதம் (ரூ.88.90 கோடி) குறைந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த வருவாய் ரூ.142 கோடி. இதில் ரூ.106 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வருவாய் ரூ.29 கோடி. இதில் செலவிடப்பட்ட தொகை ரூ.18 கோடி .
அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 2022}23 காலகட்டத்தில் ரூ.85.17 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 91 சதவீதம் (ரூ.40 கோடி) அதிகமாகும். அதேநேரம், ஆம் ஆத்மி செலவிட்ட தொகை ரூ.102 கோடி.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm