நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்

பிரயாக்ராஜ்:

உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியின் சுரங்க அறையில் ஹிந்து சிலைகளுக்கு பூஜை நடத்த தடையில்லை என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

பூஜை நடத்த அனுமதி அளித்து மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது.  கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த மசூதியில் ஆய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை, 17ம் நூற்றாண்டில் ஒüரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட பிரம்மாண்ட ஹிந்து கோயில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கு மசூதி தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த மசூதியின் நிலவறையில் உள்ள சிருங்கார் கௌரி உள்ளிட்ட ஹிந்து சிலைகளுக்கு பூஜை செய்ய அனுமதி அளித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மசூதி நிர்வாக குழு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால், மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட உயர்நீதிமன்றத்துக்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset