
செய்திகள் இந்தியா
ராகுல் தொகுதியில் டி.ராஜாவின் மனைவி போட்டி
திருவனந்தபுரம்:
கேரளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தற்போதைய மக்களவைத் தொகுதியான வயநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் கேரளத்தில் இந்தியா கூட்டணி ஏற்படாத வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.ஆக உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கட்சியின் முன்னாள் எம்.பி.யான பானீயன் ரவீந்தரன், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதேபோல், மாநில முன்னாள் வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் திரிச்சூர் தொகுதியிலும், இளைநரணி தலைவர் சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மொத்தமுள்ள 20 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் கேரள காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am