நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வங்கி கொள்ளையர்களை மடக்கி பிடித்த பெண் காவலர்

ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூரில் வங்கி காசாளரை துப்பாக்கியால் சுட்டு பணத்தைத் திருடி சென்ற இரு கொள்ளையர்களை பெண் காவலர் மடக்கிப் பிடித்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் முகமூடி அணிந்தபடி இரு கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். அப்போது, வங்கி காசாளரை சுட்டுவிட்டு கையில் கிடைத்த பணத்துடன் தப்பியோடினர்.

வங்கிக்கு வெளியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டு, அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தார்.

இதற்கு பிறகு கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்தனர்.

கொள்ளையர்களில் ஒருவர் மட்டும் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியதும், மற்றொரு நபர் பொம்மை துப்பாக்கியை கையில் வைத்து மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset