நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விவசாயிகளின் கணக்குகளை முடக்க சொன்ன ஒன்றிய அரசு: எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

புது டெல்லி: 

தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் 177 கணக்குகளை ஒன்றிய அரசின் உத்தரவை பின்பற்றி முடக்கிய எக்ஸ் நிறுவனம், இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் ,விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினார்.

அவர்களை ஹரியாணா போலீஸார் கனௌரி, ஷம்புவில்
ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 21 வயது விவசாயி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. விவசாயி ஒருவர் உயிரிழந்ததால் ‘டெல்லி சலோ’ பேரணியை  2 நாள்களுக்கு விவசாய சங்கங்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும் விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 4 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடித்துள்ளது.

போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிடும் விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இதைத் தடுக்க விவசாயிகளின் 177 எக்ஸ் கணக்குகளுக்கு தடை விதிக்குமாறு ஒன்றிய அரசு எக்ஸ் (X) நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இதை செயல்படுத்திய எக்ஸ் நிறுவனம் அதிருப்தி வெளியிட்டது. இந்தியாவில் மட்டுமே இந்தக் கணக்குகளை தடுப்போம்.

இந்த  நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், மேலும் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை குறைப்பதாக உள்ளது.

ஒன்றிய அரசின் உத்தரவை எங்களால் பகிர முடியாது. ஆனால் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவில் வெளியிடுவது சரியானது என்று நாங்கள் நம்புகிறோம் என்று எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset