நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போலீசார் நடத்திய ரப்பர் தோட்டா தாக்குதலில் ஒரு விவசாயி பலி

சண்டீகர்:

தில்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதில், 21 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

பேரணியை 2 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள விவசாயிகள் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

விவசாயிகள் மீது தடியடி நடத்தியபோது கற்கள் வீசப்பட்டதில் 12 போலீஸôர் காயமடைந்தனர்.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் கடந்த 13ம் தேதி பஞ்சாபில் இருந்து புறப்பட்டனர்.

ஹரியாணா எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்த ட்ரோன்கள் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதால் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.

21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுப்கரனின் தலையில் பலத்த காயம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், "ஹரியாணா போலீஸார் நடத்திய ரப்பர் தோட்டா தாக்குதலில் சுப்கரன் உயிரிழந்ததாக' விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset