நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸ் - சமாஜவாதி தொகுதிப் பங்கீடு முடிந்தது

லக்னோ:

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மீதமுள்ள தொகுதிகளில் சமாஜவாதி, பிற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

ரேபரேலி, அமேதி, வாரணாசி, கான்பூர் நகர், ஃபதேபூர் சிக்ரி, பஸ்கான், சஹாரன்பூர், பிரயாக்ராஜ், மகராஜ்கஞ்ச், அம்ரோஹா, ஜான்சி, புலந்த்சாகர், காஜியாபாத், மதுரா, சீதாபூர், பாரபங்கி, தேவரியா ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்குவதாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்  அறிவித்திருந்தார். இதையடுத்து, பிரியங்கா காந்தியின் தலையீட்டில் காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதி சமாஜவாதி போட்டியிடவுள்ளது. மற்ற தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரிக்கவிருப்பதாக சமாஜவாதி அறிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset