நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை

நார்வே:

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை 2022-ஆம் ஆண்டில் வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.

சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனைச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு செயற்கைக்கோள்வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் நில்சன் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முற்போக்கு கட்சியை சேர்ந்த மரியஸ் நில்சன் , ரஷியா - உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset