நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜூன் மாதம் முதல் பிரிட்டிஷ் பணநோட்டுகளில் மன்னர் சார்ல்ஸின் படம்

 லண்டன்: 

பிரிட்டிஷ் பணநோட்டுகளில் மன்னர் சார்ல்ஸின் (Charles) படம் இடம்பெறவிருக்கிறது.

ஜூன் 5ஆம் தேதியிலிருந்து நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.  

அவை பெரும் அளவில் அச்சிடப்படமாட்டா. காலஞ்சென்ற எலிசபெத் அரசியாரின் படம் உள்ள நோட்டுகள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படுவதாக இங்கிலாந்து வங்கி சொன்னது.

நோட்டுகளின் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவில் மட்டுமே புதிய நோட்டுகள் அச்சிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இங்கிலாந்து வங்கி அச்சிடும் நோட்டுகளில் இடம்பெறும் இரண்டாவது அரச ஆட்சியாளர், மன்னர் சார்ல்ஸ்.

அவருடைய முகம் இடம்பெறும் நாணயங்கள் ஏற்கெனவே அச்சிடப்பட்டுள்ளன.

அவை கடந்த ஆண்டு இறுதியிலிருந்து பயன்படுத்தப்படுகின்றன.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset