நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எண்ணமில்லை: ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ:

விண்வெளியில் அணு ஆயுதம் உட்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் அமலிலுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா உட்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.

இதனிடையே, விண்வெளி திட்டங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா செயல்படுவதாகவும், விண்வெளியில் செயற்கைகோள் ஆயுத திறனை அந்த நாடு பெற்றுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

செயற்கைகோள் ஆயுதம் என்பது எந்த வகையானது என்ற விவரத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

ஆனால் அஃது அணு ஆயுதம் சார்ந்தது என்ற தகவல் பரவியது.

இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாடு தெளிவானது, வெளிப்படையானது என்று  ரஷ்ய அதிபர் புதின் கூறினார். 

மேலும், விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset