நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போர் நிறுத்த ஐ.நா. தீர்மானத்தை ரத்து செய்தது அமரிக்கா

நியூயார்க்:

காசாவில் போர் நிறுத்துவதற்காக அந்தப் பகுதியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள உதவியாக அங்கு சண்டை உடனடியாக நிறுத்த அல்ஜீரியா கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது.

பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில்  அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. வாக்கெடுப்பை பிரிட்டன் புறக்கணித்து.

இதன் மூலம், காசாவில் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஏறத்தாழ அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இருந்தாலும், அமெரிக்காவின் "விட்டோ'வால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படமுடியாமல் போனது.

இதுவரையில் காசா போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 3 தீர்மானங்களை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளது.

Israel-Hamas war updates: Gaza under 'total blockade', refugee camp hit |  Israel War on Gaza News | Al Jazeera

இதனிடையே, காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 4 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,195 அதிகரித்துள்ளது.

இதனிடையே, காசா முனைப் பகுதியில் தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.

இதுவரை காசா தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானங்களில் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா தவிர்த்து வந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset