நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

சென்னை:

நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னை அருகே பனையூரில் உறுப்பினா் சோ்க்கை, உள்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடா்பான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தின் முடிவு குறித்து கட்சித் தலைமை வெளியிட்ட அறிக்கை:

தலைவரின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 

தலைவரின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset