நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் சாலைகளைச் சீரமைக்க 168 மில்லியன் ஒதுக்கீட்டுக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது

ஜொகூர் பாரு: 

மாநிலத்தின் சாலைகளை, குறிப்பாக வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளுக்காக அரங்கம் 168 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 

ஜொகூர் அரசுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சகத்துக்கும் இடையே நடந்த தொடர் சந்திப்புகளைத் தொடர்ந்து இந்த ஒதுக்கீடுக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதாக ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி தெரிவித்துள்ளார். 

பயனர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த எப்போதும் பாடுபடும் மத்திய அரசின் அக்கறையை இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் காண முடிகின்றது என்று அவர் கூறினார். 

ஜொகூர் பாரு-மெர்சிங் சாலையை உள்ளடக்கிய எஃப்டி003 வழித்தடத்தை 120 மில்லியன் ரிங்கிட் செலவில் உயர்த்துவது உட்பட, ஜொகூரில் பல சாலை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் அக்கறைக்கு மந்திரி பெசார் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த டிசம்பரிலிருந்து இவ்வாண்டு தொடக்கம் வரை ஜொகூரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க 39 மில்லியன் ரிங்கிட் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, சேதமடைந்த ஃபெல்டா உலு தெப்ராவ் சாலையைச் சீரமைக்கும் பணிக்காக மேலும் 9 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டது. 

மேலும் இது ஜொகூரில் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற திட்டங்களை உள்ளடக்காது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த Onn Hafiz, ஜொகூர் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நல்ல ஒத்துழைப்பு மக்களின் நலனுக்காக பலப்படுத்தப்பட வேண்டும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஜொகூர் பாரு - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ) மற்றும் ஜொகூர் வருகை ஆண்டு 2026 ஆகியவற்றைச் செயல்படுத்தும் மாநிலத்தின் சாலை வலையமைப்பை மத்திய அரசு மேம்படுத்த முடியும் என்று ஜொகூர் அரசாங்கம் நம்புகிறது.

"JS-SEZ மற்றும் ஜோகூர் வருகை ஆண்டு 2026 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு பிற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பு வலையமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் ஜொகூர் தேசத்திற்கும் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் நன்மைகளைத் தரும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset