நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விளேடிமிர் புதினிடமிருந்து காரைப் பரிசாக பெற்றார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்

பியோங்யாங்: 

ரஷ்ய அதிபர் விளேடிமிர் புதினிடமிருந்து காரைப் பரிசாக பெற்றார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட உபயோகத்திற்காக இந்த கார் அவருக்கு வழங்கப்பட்டதாக வடகொரியாவின் ஊடகமான KCNA செய்தி வெளியிட்டது. 

ரஷ்யாவும் வடகொரியாவும் அணுக்கமான உறவினை மேற்கொண்டு வருவதுடன் பல்வேறான உதவிகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. 

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட காரானது வடகொரியாவின் அதிபர் கிம்மின் முன்னணி உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக கிம் ஜாங் உன்னின் தங்கை புதினுக்குத் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset