நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த Karthik Live in KL 2024

கோலாலம்பூர்:

நேற்று 17-ஆம் தேதி கோலாலம்பூர் மெகா ஸ்டார் அரேனா அரங்கில் இரவு 7 மணி முதல் 11 மணி பாடகர் கார்த்திக்கின் Karthik Live in KL 2024 இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக அரங்கேறியது. 

MyEvents International ஏற்பாட்டில் DSG Creations இணைந்து வழங்கிய இந்த இசை நிகழ்ச்சியில் 5280 பேர் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். 

இந்த இசை நிகழ்ச்சியில் DSG Creations நிறுவனரும், தலைவருமான டத்தோஸ்ரீ ஜி ஞானராஜா, DSG Creations நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கீதாஞ்சலி ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். 

மேலும், புகழ்பெற்ற பிரபல நடிகை தமன்னாவின் சிறப்பு தோற்றமும் பார்வையாளர்களைக் ஈர்த்தது. 

இரவு 7 மணி முதல் டிஜே தாஸின் ஜேமிங் பாடல்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. இந்த அங்கம் இரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. 

கார்த்திக்கின் இரண்டாவது இசை நிகழ்ச்சி இரசிகர்களின் ஆதரவால் எதிர்ப்பார்ப்பையும் கடந்து வெற்றியடைந்தது தமக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனலின் இணை நிறுவனர் டத்தின் வீரா சப்ரினா கூறினார்.

மேலும், டிஎஸ்ஜி கிரியேஷன்ஸ் உடனான ஒத்துழைப்பு மற்றும் நடிகை தமன்னாவின் வருகை இந்த நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து ஆதரவாளருக்கும்  அவர் தனது நிறுவனத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

மேலும், வருங்காலங்களில் இது போன்ற பல நிகழ்ச்சிகளை முன்னெடுக்க இந்த நிகழ்ச்சி ஓர் உந்துகோளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சி பாடகர் கார்த்திக்கின் இணையற்ற இசைத் திறனை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், மை ஈவண்ட்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிஎஸ்ஜி கிரியேஷன்ஸ் ஆகியவை சிறந்த பொழுதுபோக்கு அனுபவங்களைத் தருவதில் முன்னணி ஏற்பாட்டுக் குழுவாக இருந்தது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset