நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Karthik Live in KL:  தமன்னாவை அழைத்து வந்து திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்திய டிஎஸ்ஜி

கோலாலம்பூர்:

MyEvents International & DSG Creations பெருமையுடன் வழங்கிய Karthik Live in KL இசை நிகழ்ச்சியில் முன்னணி நடிகை தமன்னா திடீரென அழைத்து வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை டிஎஸ்ஜி ஏற்படுத்தினார்.

குறிப்பாக விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே என்ற பாடலை கார்த்திக் பாடிய போது தமன்னா வெட்கப்பட்டதை அரங்கத்தில் குடியிருந்த அனைவரும் வெகுவாக ரசித்தனர்.

மெகா ஸ்டார் அரினா அரங்கில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் டத்தோ ஸ்ரீ ஜி தமன்னாவுடன் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அரங்கத்திற்குள் நுழைந்தார்.

அவரும் நடிகை தமன்னாவும் இணைந்து சரும பாதுகாப்பு வர்த்தக துறையில் கால் பதிக்கின்றார்கள். தம்மிஜி (TammyG) என பெயரிடப்பட்டுள்ள அந்த புதிய வர்த்தகத் துறை சார்ந்த விவகாரத்திற்காக மலேசியாவிற்கு வந்த நடிகை தமன்னா நேற்றைய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மீண்டும் தமன்னா மலேசியா வருவார். இந்த சரும பாதுகாப்பு பொருளின் அறிமுக விழா மலேசியாவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset