நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல உருது கவிஞர் குல்சாருக்கும் சமஸ்கிருத அறிஞர் ராம்பத்ராச்சாரியாக்கும் ஞானபீட விருது

புது டெல்லி: 

பிரபல உருது கவிஞர் குல்சார், சமஸ்கிருத அறிஞர் ராம்பத்ராச்சாரியா ஆகியோர் ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலக்கியத் துறையில் சாதனை படைத்தோருக்கு ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பகிறது. 

58வது ஞானபீட விருது பெறுவதற்கு உருது கவிஞர் குல்சார், சமஸ்கிருத அறிஞர் ராம்பத்ராச்சாரியா ஆகிய இரு மொழிகளைச் சேர்ந்த அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சம்பூரண் சிங் கல்ரா என்ற பெயரில் குல்சார் பாலிவுட் திரைப்படங்களுக்கு பல்வேறு திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். 

குல்சாரின் படைப்புகள்:
இவர் 2002 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதினை பெற்றார். 2004இல் பத்ம பூஷண் விருதையும், 2013இல் தாதா சாஹேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருதுபெற்ற "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' பாடலை இவர் எழுதினார். மேலும் "ஓம்கரா', "தில் சே', "குரு' ஆகிய ஹிந்தி திரைப்படங்களில் இவர் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்:
இவர் "கோஷிஷ்', "பரிச்சய்',  "மெüசம்', "இசாஸத்' உள்ளிட்ட விருதுபெற்ற திரைப்படங்களையும் "மிர்ஸா காலீப்' என்ற தொலைக்காட்சி தொடரையும் இயக்கியுள்ளார்.

ராம்பத்ராச்சாரியா:
விஷ்ணுவின் அவதாரங்களை வழிபடும் ராமநந்தா பிரிவைச் சேர்ந்த 4 ஜகத்குருக்களில் ராம்பத்ராச்சாரியாவும் ஒருவர். 22 மொழிகள் பேசும் இவர் சமஸ்கிருதம், ஹிந்தி, அவாதி, மைதிலி உள்ளிட்ட மொழிகளில் கவிதைகள் எழுதியுள்ளார். 2015ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார்.

ஞானபீட விருது:
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைச் சேர்ந்த படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

இந்த விருதுபெறுவோருக்கு ரூ.21 லட்சம் பரிசுத்தொகை, வாக்தேவி சிலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சமஸ்கிருத மொழிக்கு இரண்டாவது முறையாகவும் உருது மொழிக்கு 5ஆவது முறையாகவும் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset