நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Karthik Live in KL இசை நிகழ்ச்சி: டிஎஸ்ஜி தனியா வந்தாரா? தமன்னாவோடு வந்தாரா?: இன்று பதில் தெரியும்

கோலாலம்பூர்:

MyEvents International தயாரிப்பில் DSG Creations வழங்கும் Karthik Live in KL இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காவாலா புகழ் நடிகை தமன்னா மலேசியா வருகிறார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகரும், தொழிலதிபருமான டத்தோஶ்ரீ ஜி, நேற்று மும்பை நகரிலிருந்து மலேசியா நோக்கி புறப்படும் போது, தனியாக வந்தாரா? அல்லது நடிகை தமன்னாவையும் அழைத்து வந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமன்னா மலேசியாவிற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு கலை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கார்த்திக் இசை நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டால், அது இசை ரசிகர்களுக்கு மற்றொரு மறக்க முடியாத தருணத்தை உருவாக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

2006ஆம் ஆண்டு தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

2010ஆம் ஆண்டு முன்னணி இயக்குநர் லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னா, இத் திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் திரைத்துறையில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

அதோடு கல்லூரி, கண்டேன் காதலை, கண்ணே கலைமானே, தர்ம துரை போன்ற திரைப்படங்களில் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதோடு வீரம், அயன், பாகு பலி, தேவி போன்ற வணிக ரீதியிலான வெற்றிப் படங்களிலும் நடித்தவர்.

தற்போது ஓடிடி தளங்களாக நெட்பிலிக்ஸ், அமேசோன் ஆகியவற்றில் முன்னணி பிரபலமாக வலம் வருகின்றார். 

அண்மையின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால், நடிப்பு அசுரன் எஸ்.ஜே. சூர்யா ஆகியோருடன் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கோல்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கோலிவூட்டில் டிஎஸ்ஜி கால்பதித்தார். தற்போது பல திரைப்படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே டிஎஸ்ஜியும் கார்த்திக் இசை நிகழ்ச்சியில் முதன்மை பிரமுகராக கலந்து கொள்கிறார். அவருடன் நடிகை தமன்னாவும் வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சில இசை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கும் DSG Creations, Karthik Live in KL இசை நிகழ்ச்சியில் கைகோர்த்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மலேசிய இசை கலைஞர்களுக்காக தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் DSG Creations தொடர்ந்து அதே பாதையில் பயணிக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியின் முதன்மை இணைய ஊடக ஆதரவாளராக நம்பிக்கை செயலாற்றுவது மற்றொரு பரிமாற்றத்திற்கு எங்களை கொண்டு செல்கிறது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset