நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2026ல் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதிகளை குறிவைத்திருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

சென்னை:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டாம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி போட்டியிடும் என அறிவித்ததோடு, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளிலும் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில், கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடந்த நிலையில், அதில் பல்வேறு விஷயங்களை தொண்டர்களுக்கு வீடியோ வாயிலாக அறிவுறுத்தியுள்ளாராம் விஜய். 

அத்துடன், 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடவும் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏன் தூத்துக்குடி?

விஜய் தூத்துக்குடியை தேர்வு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 

அவரது ஆரம்ப நாட்களிலிருந்தே, தூத்துக்குடியில் செல்வாக்கு அதிகம் கொண்டவராக இருந்து வருகிறார் விஜய். 

அது மட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, நிதி உதவியையும் வழங்கினார். 

அதன் பிறகு, தூத்துக்குடி, நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணமும் வழங்கினார். 

இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளில் தூத்துக்குடியோடு தன்னை தொடர்புபடுத்திக்கொண்டு வருவதால், அங்கே அதிகரித்து வரும் செல்வாக்கே, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை விஜய் குறிவைக்க முக்கிய காரணம்.

ஏன் நாகை தொகுதி?

தூத்துக்குடியைப் போலவே நாகையிலும் கவனம் செலுத்தி வரும் விஜய், 2011ஆம் ஆண்டு மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் போராட்டமும் நடத்தினார். 

இலங்கை கடற்படையால் அப்போது 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டத்தை கடுமையாக சாடிய விஜயின் அந்த பேச்சு, அப்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருந்தது. 

அவரின் ஆவேசமான பேச்சு மீனவ சமுதாய மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், இந்த தொகுதியும் தனக்கு சாதகமாக இருக்கும் என கருதுகிறாராம் விஜய்.  

கடைசி நேரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவு செய்துள்ள விஜய், தென்மண்டலத்தை வலுப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset