நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்க முதலாளிகள் ஒப்புதல்: மனிதவள அமைச்சு

கோலாலம்பூர்:

மனிதவள அமைச்சு (KSM), தீபகற்ப மலேசிய மனிதவளத் துறை (JTKSM) மூலமாக 733 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உரிமைகோரல் வழக்குகளின் விசாரணை நடவடிக்கையை ஜொகூர் பெங்காராங்கில் 2024 பிப்ரவரி 5ஆம் தேதி  நடத்தியது.

இதன் மூலம் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதிலிருந்து வேலைகளை வழங்கப்படாத நாள்கள் முதல் கொடுக்கப்படாத ஊதியம் உட்பட்டவை இந்த கோரிக்கையில் அடங்கும். 

இந்த விசாரணை நடவடிக்கையில் ஜொகூர் மனிதவளத் துறையின் அதிகாரிகள் முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் வங்காள தேச தூதரகத்தின் அதிகாரிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இருதரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு RM1,035,557.50 மீதத் தொகை வழங்கப்பட ஆவணம் செய்யப்பட்டது. 

முன்னதாக இந்த விவகாரம் குறித்து 2024 ஜனவரி 16ஆம் தேதி கருத்துரைத்த மனிதவள அமைச்சு, பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்குவதாகுவதோடு வேலை வழங்கப்படாத தொழிலாளர்களும் முதலாளிகள்தான் பொறுப்பு என்பதை வலியுறுத்தியிருந்தது.

அதோடு ), தீபகற்ப மலேசிய மனிதவளத் துறை (JTKSM) மூலம் ஒரு சிறப்புப் பணியமர்த்தல் செயல்முறை (PTM) வாயிலாக வேலையில்லாத தொழிலாளர்களை மற்றொரு முதலாளியிடம் சேர்க்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.

இது ஒரு சிறந்த முன்னுதாரணம். இது அடுத்த அந்நியத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். குறிப்பாக இது சட்டப்பூர்வமாக அழைத்து வரப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்ளடக்கியது. அவர்கள் நாட்டிற்கு வந்தவுடன் வேலை வழங்காமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முதலாளிகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகளால் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதோடு வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் மீதமுள்ள ஒதுக்கீடும் நீக்கப்படும் என மனிதவள அமைச்சு எச்சரித்துள்ளது.

தொழிலாளர் சட்டங்களை மீறும் எந்தத் தரப்பினரோடும் மனிதவள அமைச்சு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது, மேலும் தொழிலாளர்களின் நலன் எப்போதும் உத்தரவாதமாக இருப்பதை உறுதி செய்யும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset