நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் விவகாரம்: பெர்சே பேரணிக்கு ஆதரவா? - ஹம்சா

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கூட்டாக அமைதி பேரணியை முன்னெடுப்பதற்கு முன் பெர்சே அமைப்புடன் முதலில் விவாதிக்க வேண்டுமென தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறினார்.

முதலில் பேரணி நடத்துவதற்கான இலக்கை இரு தரப்பினரும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

"நாங்கள் முதலில் ஒன்றாக அமர்ந்து, எந்தச் சிக்கலுக்காக ஒன்றாகப் போராட விரும்புகின்றோம் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்."

சில விவகாரங்கள் குறித்துப் பேசி முடிவெடுக்க வேண்டியுள்ளது. கூடிய பேரணிக்கு அழைப்பு விடுக்க முடியாது எனத் தேசியக் கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஹம்சா இவ்வாறு கூறினார்.

முன்னதாக எஸ்ஆர்சி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நஜிப்பின் தண்டனையை 50% ஆகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்துச் சில தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset