நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் விஜய்யின்  69ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக தகவல் 

சென்னை: 

நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் வெற்றிமாறன் - விஜய் கூட்டணி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இரு தரப்பும் இந்த செய்தியை இன்னும் உறுதிசெய்யவில்லை. 

நடிகர் விஜய் தற்போது 68ஆவது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் அடுத்து 69ஆவது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்றும் அதுவே தமது கடைசி படமாக இருக்கும் என்று அவர் சொன்னார். 

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று நடிகர் விஜய் தமது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset