நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 ஃபிஃபா உலக கிண்ண இறுதியாட்டம் நியூயார்க்கில் நடைபெறும் 

வாஷிங்டன்: 

2026ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலக கிண்ண காற்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகிறது. 

இந்நிலையில், உலக கிண்ண போட்டியின் ஆட்டத்தின் பிரதான அட்டவணையை ஃபிஃபா காற்பந்து சம்மேளனம் அறிவித்தது. 

அதன்படி, 2026ஆம் ஆண்டு உலக கிண்ணம் ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது.  ஜூன் 11ஆம் தேதி தொடக்க ஆட்டம் மெக்சிக்கோ சிட்டியில் நடைபெறும் என்றும் இறுதியாட்டம் ஜூலை 19 அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முறை 48 நாடுகள் இந்த போட்டியில் பங்கெடுக்கவுள்ளன என்று ஃபிஃபா காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபந்தினோ தெரிவித்தார். 

2022ஆம் ஆண்டு உலக கிண்ணம் கத்தாரில் நடைபெற்றது. இந்த உலக கிண்ண தொடரில் அர்ஜெண்டினா பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலக கிண்ணத்தைத் தட்டி சென்றது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset