நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரிமியர் லீக்: லிவர்பூலை வீழ்த்தியது அர்செனல்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியை அரசெனல் அணியினர் வீழ்த்தினர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்சென்ல் அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தினர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை  சகா, மார்தினெலி, துரோசார்ட் ஆகியோர் அடித்தனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset