நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டேவிட் பேக்கமின் வருகை டி.ஆர்.எக்ஸ் தளத்தை அதிர வைத்தது

கோலாலம்பூர்: 

முன்னாள் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான டேவிட் பேக்கம் நேற்று துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், டி.ஆர்.எக்ஸ் தளத்திற்கு வருகை புரிந்தார். 

நூற்றுக்கணக்கான தேசிய கால்பந்து ஆதரவாளர்கள் அவரைக் காண அங்குத் திரண்டனர். 

49 வயதான முன்னாள் இங்கிலாந்து வீரரின் வருகை சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர் டி.ஆர்.எக்ஸ் தளத்திற்கு வருவதை அறிந்த உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் அதிகாலையிலிருந்து அவருக்காகக் காத்திருந்தனர். 

மாலை 6 மணியளவில் டேவிட் பேக்கம் டி.ஆர்.எக்ஸ் தளத்திற்கு வருகை புரிந்த நிலையில் மக்கள் ரசிகர்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். 

அனைத்துலக விளையாட்டுக் காலனி பிராண்டின் 30 ஆண்டு கண்காட்சியை துவக்கி வைப்பதற்கு அவர் இங்கு வருகை மேற்கொண்டுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset