நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் - 2024; கொழும்பில் குழப்பநிலை: போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலிசார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு:

'மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் - 2024' எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) பிற்பகல் கொழும்பில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

வெட் வரி உள்ளிட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர். 

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி ஆரம்பமாகி முதல் 10 நிமிடங்களுக்குள்ளால் ஆர்ப்பாட்டத்தின் மீது
கண்ணீர்ப்புகையும், நீர்த்தாரைப் பிரயோகமும் இடம்பெற்றது.

மீண்டும் பேரணியில் கலந்து கொண்ட ஆதரவாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச பேரணி உரையை நிகழ்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு மூன்று நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. 

கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியனவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset