நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொத்துடைமையை அறிவிக்க தவறிய வழக்கில் டைய்ம் ஜைனுடின் குற்றத்தை மறுத்துள்ளார்

கோலாலம்பூர்: 

சொத்துக்களை அறிவிக்கத் தவறியக் குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுடின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார். 

38 நிறுவனங்கள், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங், கெடா ஆகிய மாநிலங்களில் 19 நிலங்கள் ,ஆறு சொத்துக்களில் தனது உரிமையை அறிவிக்கத் தவறியதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) சட்டம் 2009 இன் பிரிவு 36(2) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமானா சஹாம் நேஷனல், அமானா சஹாம் பெர்ஹாட் கணக்குகள், ஏழு சொகுசு கார்களின் உரிமையை அறிவிக்கத் தவறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அவர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset