நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓய்வூதியம் ரத்து செய்யும் திட்டம் மலாய்க்காரர்களை பாதிக்காது: பிரதமர்

கோலாலம்பூர்:

ஓய்வூதியத்தை ரத்து செய்யும் திட்டம் மலாய்க்காரர்களை பாதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஓய்வூதியத்தை ரத்து செய்தது அரசு ஊழியர்களில் பெரும்பான்மையாக இருக்கும் மலாய்க்காரர்களின் தலைவிதியை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளில் எந்தவொரு உண்மையும் இல்லை.

மேலும் நாடு திவாலாவதைத் தடுக்கவும், எதிர்கால சந்ததியினருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதைத் தடுக்கவும் திட்டத்தை மாற்றுவதற்கு ஒரு புதிய திட்டம் இருக்க வேண்டும்.

இது நீண்ட காலத்திற்கு முன்பே ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக 90ஆம் ஆண்டுகளிலேயே இது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டது. ஆனால் எந்த அரசும் அதை செயல்படுத்தவில்லை.

இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களை நிரந்தர அடிப்படையில் புதிய ஆட்சேர்ப்புகளை உருவாக்கும்.

இதனால் மலாய்க்காரர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset