நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரை வழியனுப்பும் நிகழ்வை முன்னிட்டு கோலாலம்பூரில் 7 சாலைகள் முழுமையாக மூடப்படும்

கோலாலம்பூர்:

மாமன்னரை வழியனுப்பும் நிகழ்வை முன்னிட்டு தலைநகரில் 7 சாலைகள் முழுமையாக மூடப்படும்.

13 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரனை பிரிவு இயக்குநர் டத்தோ முஹம்மத் அஸ்மான் கூறினார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா பதவிக் காலம் முடிவடைந்து வரும் செவ்வாய்க்கிழமை தனது சொந்த மாநிலத்திற்கு திரும்புகிறார்.

இதனை முன்னிட்டு ஜாலான் டாமன்சாராவில் இருந்து ஜாலான் பார்லிமெண்ட் செல்லும் சாலை, ஜாலான் சுல்தான் அப்துல் ஹலிமில் இருந்து ஜாலான் பார்லிமெண்ட் ஆகிய சாலைகள் முழுமையாக மூடப்படுகிறது.

சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் இருந்து ஜாலான் பார்லிமெண்ட், ஜாலான் கூச்சிங்கில் இருந்து டத்தோ ஓன் வட்டபாதை, ஜாலான் சலாவூடின், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் துன் பேராக் ஆகிய சாலைகளை காலை 9 மணி முதல் முழுமையாக மூடப்படும்.

இதே போன்று தலைநகரில் உள்ள 13 சாலைகளும் கட்டம் கட்டமாக மூடப்படும்.

ஆகவே பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

அதே வேளையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருப்பார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset