நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைப்பூலோ தொகுதியில் 1.13 மில்லியன் ரிங்கிட் சமூக திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது: டத்தோ ரமணன்

சுபாங்:

சுங்கைப்பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 1.13 மில்லியன் ரிங்கிட் சமூக திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

இதனை அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் கூறினார்.

சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பண்டிகை காலங்களில் மக்களுக்கு உதவிப் பொருட்களுக்கும் பண முடிப்பும் வழங்கப்படுகிறது.

அவ்வகையில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு 150 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

இப்படி கடத்தாண்டு இத்ததொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 29 சதவீதம் அதாவது 1.13 மில்லியன் ரிங்கிட் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு இத்திட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

இதனிடையே நாட்டில் உள்ள அரசு சாரா இயக்கங்கள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதுடன் நலன் பேணும் நடவடிக்கைகளின் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset