நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக நாடெங்கும் படையெடுக்கும் ஸ்ரீ முருகன் நிலையம்: டான்ஸ்ரீ தம்பிராஜா

பெட்டாலிங் ஜெயா:

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீ முருகன் நிலையம் நாடெங்கும் படையெடுக்கும் என்று அதன் இயக்குநர் டான்ஸ்ரீ தம்பிராஜா கூறினார்.

கல்வியும் சமயமும் என்ற கோட்பாட்டைத் தாங்கி கடந்த 42 வருடங்களாக இந்திய சமுதாயத்தில் பெரும் கல்விப்புரட்சியை ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், ஸ்ரீ முருகன் நிலையத்தின் முன்னேற்றம் நம் உரிமை எனும் நிகழ்வு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ முருகன் நிலைய தலைமையக ஆசிரமத்தில் நடைபெற்றது. 

2024 ஆண்டுக்கான பணி, குறிக்கோள் விளக்கக்கூட்ட அமைப்பிலான இந்நிகழ்வில் 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா,

இவ்வருடம் மார்ச் மாதம் முதற்கொண்டு பினாங்கு முதல் ஜொகூர் வரை மீண்டும் புத்தெழுச்சியுடன் வார வகுப்புகள் (ஆறாம் ஆண்டு, மூன்றாம் படிவம் மற்றும் எஸ்பிஎம்) தொடங்கப்படும் என்றார்.

யூபிஎஸ்ஆர்., பிடி 3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அபாரமாகக் குறைந்துள்ளன எனும் பல பெற்றோர்கள்  மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டும், கல்வி ஒன்றே இந்நாட்டில் இந்திய சமுதாயத்தை ஒருமனதாக ஒன்றிணைக்கும் வெற்றிக்கருவி என்பதை உணர்ந்தும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

இதனிடையே பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையம் கடந்த பல ஆண்டுகள் மூடப்பட்டிருந்து. வரும் மார்ச் மாதம் மீண்டும் அம்மையம் செயல்பட தொடங்கும்.

அதே போன்று நாடு தழுவிய நிலை 127 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு ஸ்ரீ முருகன் நிலையங்கள் செயல்படும்.

மேலும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான கருத்தரங்கு அடுத்த மாதம் பிப்ரவரி 17, 18ஆம் தேதிகளில நடைபெறவுள்ளது. 

இந்திய சமுதாயம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதற்கு கல்வி மிகவும் முக்கியம்.

அதை கருத்தில் கொண்டே ஸ்ரீ முருகன் நிலையம் இந்த கல்வி புரட்சியை மீண்டும் தொடங்குகிறது என்று அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset