நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எனக்கும் விஜய்க்கும் போட்டியில்லை; காக்கா கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் 

சென்னை: 

தமக்கும் விஜய்க்கும் எந்தவித போட்டியுமில்லை; ரஜினிகாந்திற்கு ரஜினிதான் போட்டி என்று லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா-கழுகு கதை ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் தாம் நடிகர் விஜய்யை குறி வைத்துதான் இவ்வாறு பேசியதாக தகவலக்ள் வெளியானது. 

இதனால் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இதனால் ஆரோக்கியமற்ற சூழல் நிலவியதை அறிந்து பெரும் வருத்தம் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சொன்னார். 

நடிகர் விஜய்க்கும் எனக்கும் எந்த போட்டியுமில்லை என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

முன்னதாக, லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இத்திரைப்படம் குறித்தும் பேசினார். லால் சலாம் திரைப்படத்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய வேளையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset