நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா இனப்படுகொலை: இஸ்ரேலுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?

தி ஹேக்:

காசாவில் இனப் படுகொலையைத் தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச அமர்வின் தலைவர் ஜோன் இ. டான்ஹ்யூ வெளியிட்ட இடைக்காலத் தீர்ப்பில்,

காசா முனைப் பகுதியில், இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. வரையறைக்குள் வரும் எந்தவொரு செயலிலும் இஸ்ரேல் நாட்டுப் படையினர் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இனத்தின் அடிப்படையில் பாலஸ்தீனர்களை படுகொலை செய்வது, அவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காயப்படுத்துவது, அவர்களது வாழ்க்கைச் சூழலை வேண்டுமென்றே திட்டமிட்டு சீர்குலைப்பது, பாலஸ்தீனர்களுக்கு மேலும் குழைந்தைகள் பிறந்து இனம் விருத்தியாவதைத் தடுக்கும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை இஸ்ரேல் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

காசா பகுதியில் மிக மோசமான சூழலில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் கிடைப்பதை இஸ்ரேல் உடனடியாக உறுதி செய்யவேண்டும்.

அந்தப் பகுதியில் தங்கள் நாட்டுப் படையினர் இனப்படுகொலையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அழிக்காமல் நீதிமன்றத்திடம் ஒரு மாதத்துக்குள் இஸ்ரேல் சமர்ப்பிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset