நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் தொடர்ந்து முட்டுக்கட்டை: கத்தார் குற்றச்சாட்டு

தோஹா:

அரசியல் லாபத்துக்காக காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக கத்தார் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து "எக்ஸ்' ஊடகத்தில் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்  பதிவிட்டிருப்பதாவது,

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும், ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதிகளாக இருப்பவர்கள் விடுவிக்கப்படுவதற்குமான பேச்சுவார்த்தைக்கு கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

ஆனால், இந்த சமாதான முயற்சியை மோசமாக விமர்சித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கும் ஒலிப் பதிவு கசிந்துள்ளது. இது, கத்தார் அரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இஸ்ரேல் பிணைக் கைதிகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைவிட, தனது அரசியல் லாபத்துக்கு நெதன்யாகு முக்கியத்துவம் தருவது தெரியவருகிறது என்று தனது பதிவில் மஜிஸ் அல்அன்சாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset